குறுகிய விவரணம்

அறோ மாநிலம் சுவிஸிலுள்ள 26 மாநிலங்களில் (உறுப்பினர் மாநிலங்கள்) ஒன்றாகும். குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 4வது பெரிய மாநில மாகும். அறோ மாநிலத்திலும் வழக்கமான அதன் பிரதேச வேறுபாடுகள் உள்ளது.

எண்ணிக்கைகளும் உண்மைகளும்

அறோ மாநிலத்தில் 700000 குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 1/4 பகுதி வெளிநாட்டவர்கள். மாநிலப் பரப்பளவு 1404 சதுர கி.மீ அதில் 11 பிராந்தியங்களும் (Bezirke) அதற்குள் 200 க்கும் தள்ளிப் போகும் கிராமசபைகளும் (Gemeinde) அடங்கும். இதன் தலை நகரம் அறோ. அரசமொழி டொச். மாநிலத்தில் பரவலாக்கப்பட்ட பிரதேசங்களும் அவற்றிற்கொரு மைய நகரங்களும் இருக்கும். அவற்றில் முக்கியமாக Aarau, Baden, Brugg, Wohlen, Bremgarten, Zofingen, Rheinfelden உம் அடங்கும். இந்தப் பிரதேசங்கள் விவசாயம் கலாச்சாரம் பொருளாதாரத்தில் ஒன்றிற்கொன்று வித்தியாசப்படும்.

வரலாறு

அறோ மாநிலம் 1803 ம் வருடத்தில் உருவாக்கப்பட்டது. பல இடங்களைச் சேர்த்து பிரெஞ்ச் பேரரசரான நெப்போலியன் பொனபாட்; அறோ மாநிலமாக்கினார். அரசியல் மதம் பொருளாதாரத்தில் ஒவ்வொன்றும் வித்தியாசப்பட்டன. இன்று வரை அதை உணரக்கூடியதாக உள்ளது. 1900ம் ஆண்டு வரை விவசாயம் மிக முக்கியமாகக் கருதப்பட்டது. பின்பு தொழில் மயமாக்கல் மெல்ல மெல்ல மாறிவிட்டது. அறோ மாநிலம் இன்றும் விவசாயத்தில் முன்னணியில் இருப்பினும் ஒரு சர்வதேச பெரிய ஸ்தாபனம் மற்றும் சிறிய மற்றும் நடுநிலை நிறுவனங்களை கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலக யுத்தக்காலப்பகுதியிலிருந்து பல குடியேறிகள் மாநிலத்தில் குடியேறியுள்ளதுடன் குறிப்பட்டளவு பங்களிப்பை பொருளாதாரத்துக்கு வழங்கியுள்ளதுடன் தற்போதும் வழங்கி வருகிறார்கள்.

சம்பிரதாயமும் பாரம்பரியமும்

மாநிலத்தின் வௌ;வேறு பிரதேசம் மற்றும் கிராமங்களில் வித்தியாசமான கலாச்சார மற்றும் பண்டிகைகளையும் கொண்டிருக்கும். அடிப்படையாக "ஒரே மாதிரியான " அறோ சம்பிரதாயம் உள்ளதன் காரணமாக மாநிலத்தின் சரித்திரத்தில் பன்முகத்தன்மை உருவாகவில்லை. பெரிய நகரங்களான Aarau, Baden, Brugg, Lenzburg அல்லது Zofingen இல் கோடைகால நேரசூசிகையில் இளைஞர் விழாக்கள் பதியப்பட்டிருக்கின்றன. இவ்விழாக்களின் நடைமுறை இந்நூற்றாண்டு ஆரம்பத்திலிருற்து ஏறத்தாழ மாறாமலே இருக்கின்றது. அத்துடன் குளிர்காலத்தில் களியாட்டவிழாவானது ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. பெரும்பாலான கிராமப்பிரதேசங்களில் விளைச்சல்விழா மற்றும் இளவேனிற்காலத்தில் அறுவடைநன்றித்திருவிழா என்பன பிரபல்யமானவை. இதைத்தவிர பல கிறிஸ்தவ விழாக்களும் உள்ளன.

அறோ - "Rüebliland"

அறோ மாநிலத்தை "Rüebliland"(கரட் நிலம்) எதற்காக அறோ மாநிலத்திற்கு இந்தப் பெயர் வந்தது என யாருக்கும் சரியாகத் தெரியாது. ஆயினும் கரட் பயிரிடுவதற்கும் அல்லது பாவனைக்கும் பெயருக்கும் சம்பந்தமில்லை. அறோ மாநிலத்தவரால் செய்யப்படும் கரட் கேக் (Rüeblitorte) சுவிஸ் முழுவதும் விரும்பப்படும். ஆண்டுக்கொரு முறை அறோவில் பெரிய கரட் சந்தை (Rüeblimarkt) நடைபெறும்.