பொதுவான ஆலோசனை நிலையங்கள்
அறோவிலுள்ள Anlaufstelle Integration Aargau (AIA) வெளிநாட்டவர்களுக்கான மத்திய ஆலோசனை நிலையமாகும். இங்கு வேலை செய்பவர்கள் தினமும் எந்நேரமும் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான விசேட ஆலோசனை நிலையங்களைத் தேடிக் கொடுப்பார்கள். அதைவிட தேடுபவர்களுக்குப் பொருத்தமான டொச்மொழி வகுப்புகளையும் உள்வாங்குதல் வசதிவாய்ப்புகளையும் செய்து கொடுப்பார்கள். முதலே பேசி உடன்பட்டால் (தொலைபேசி அல்லது நேரடியாக ) வேற்றுமொழிகளிலும் பேசலாம். முன் அறிவித்தலின்றியும் நேரடியாகப் போய் ஆரம்பத் தகவல்களையும் பெற்று தேவையாயின் ஒரு சந்திப்பிற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தகவல்களும் ஆலோசனையும் இலவசம். இதைவிட பொதுவான ஆலோசனை நிலையம், இவ்வாலோசனைகள் குறிப்பிட்ட பிறமொழியில் நடைபெறும் அல்லது குறிப்பிட்ட வாழிடப்பிரிவுக்கு பொறுப்பானதாக இருக்கும். வதியும் கிராமசபைப்பிரிவு அல்லது (Anlaufstelle Integration Aargau AIA) இல் இதுபோன்ற ஆலோசனை நிலையத்திற்கு செல்லலாம். இதைவிட வெளிநாட்டினர் கழகங்களும், முதலாவது தகவல்களை சொந்த மொழியில் வழங்குவதால் ஒரு நல்ல இடமாக உள்ளது.