அனுமதி வகைகள்
எவர் சுவிஸில் தங்கியுள்ள காலப்பகுதியில் வேலை செய்கிறாரோ அன்றி 3 மாதத்திற்கு மேல் தங்குகிறாரோ அவருக்கு ஒரு அனுமதி தேவைப்படுகிறது. இது மாநிலக் குடிவரவும் உள்வாங்குதலும் (Amt für Migration und Integration) நிர்வாகத்தால் வழங்கப்படும். இவற்றில் குறுகியகாலத் தங்குமிட அனுமதி (1 வருடம் வரை), தங்குமிட அனுமதி ( கால எல்லையுடன்) மற்றும் நிரந்தர வதிவிட உரிமை (காலவரையற்றது) வரை வித்தியாசப்படுகிறது.
- குறுகிய வதிவிடஉரிமை (L) இந்த அனுமதி உள்ளவர்கள் குறிப்பிட்ட கால எல்லை வரை (அதிகமாக 1 வருடம்) முக்கிய காரணத்தையிட்டு சுவிஸில் வாழலாம். அதிகமான EU/EFTA நாட்டுப் பிரஜைகள் வேலை வாய்ப்புக் கிடைத்தால் 3 மாதம் முதல் ஆதாரத்துடன் (வேலைப்பத்திரம்)1 வருடம் வரை இருக்கலாம்.
- வதிவிட உரிமை (B) இந்த அனுமதி உள்ளவர்கள் நீண்ட காலம் சுவிஸில் தங்கலாம். EU/EFTA நாட்டுப் பிரஜைகள் தமக்கு 1 வருடத்திற்கு மேற்பட்ட வேலைப்பத்திரம் உள்ளது என ஆதாரம் காட்டினால் அவர்கள் 1 வருடத்திற்கு மேலாக வேலை செய்ய முடியும். EU/EFTA நாட்டுப்பிரஜைகளிற்கான அனுமதி 5 வருடங்களிற்கு வழங்கப்படுகிறது. மற்றைய நாட்டவர்களுக்கு 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அதன்பின்பு அவர்கள் விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விசா நீடிப்பு எதாவது நிபந்தனைகளையொட்டி கிடைக்கலாம். உதாரணமாக டொச் வகுப்புக்குப் போதல். சில சமயம் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது நலன்புரி விடயங்களில் மற்றவரைச் சார்ந்திருந்தால் வர வேண்டிய விசா நீடிப்புத் தடைப்படலாம். அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கும் B வதிவிட அனுமதி கிடைக்கும்.
- நிரந்தர வதிவிட அனுமதி (C) சுவிஸில் தொடர்ந்து 5 அல்லது 10 வருடங்கள் கடந்து தொடர்ந்து வசித்தால் இந்த அனுமதி கிடைக்கும். இங்கேயும், EU / EFTA நாடுகள் மற்றும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.
- தற்காலிக வதிவிட அனுமதி (F ) அகதி அந்தஸ்து தேடிக் கிடையாதோருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும்.