வசிப்பிட உரிமை

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்தால் தங்களுடைய வசிப்பிட உரிமையை இழக்க நேரிடும் என்று பயப்படுகிறார்கள். ஆலோசனை மையத்திலிருந்து இதைப் பற்றிய தகவல்களைப் பெறுவது முக்கியம். ஆலோசனை பெறுதல் உங்கள் வசிப்பிட உரிமையை பாதிக்காது!

அறிய வேண்டியவை

நீங்கள் சுவிட்சர்லாந்தில் திருமணம் மூலம் வசிப்பிட உரிமையைப் (குடும்ப மறு ஒருங்கிணைப்பு) பெற்றிருந்து, அங்கு குடும்ப வன்முறையை அனுபவிப்பவராக இருந்தால், நீங்கள் பிரிந்த பிறகும் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சாத்தியகூறுகள் உள்ளன.

தற்காலிகமாக புகுந்த வீட்டிற்கு வெளியே (எ.கா. பெண்கள் தங்குமிடம் அல்லது நண்பரின் வீட்டில்) தங்குவது குடியிருப்பு அனுமதியை இழக்க வழி வகுக்காது.

பிரிய நேர்ந்தால் சட்ட நிலைமை சிக்கலானதாக இருப்பதாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் சட்ட நிலைமை வித்தியாசமாக இருப்பதாலும் ஆலோசனை உங்களுக்கு உதவும்.

வன்முறை சம்பவங்களுக்கு ஆதாரம் இருப்பது முக்கியம். ஆகவே, பின்வருவனவற்றை நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

  • காயங்கள், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் நீங்கள் பெற்ற அச்சுறுத்தல்கள் அல்லது அவமானங்களின் புகைப்படங்களை எடுக்கவும்.
  • ஆதாரங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உதாரணமாக, ஒரு நண்பரிடத்தில் அல்லது வேலை செய்யும் இடத்தில்.
  • வன்முறையைப் பற்றி உங்களைச் சுற்றி உள்ளவர்களில் சிலருக்குத் தெரியப்படுத்துங்கள் எ.கா. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் உள்ள ஒருவருக்கு, உங்களுடன் வேலை செய்பவரிடத்தில், அண்டைவீட்டாரிடத்தில் அல்லது பள்ளியில்.

எங்கே உதவியைப் பெறலாம்?

பிரிவுக்குப் பின் வசிப்பிட உரிமை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் இங்கே ஆலோசனையைப் பெறலாம்:

பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம் ஆர்காவ், 062 835 47 90 அல்லது ஆன்லைன் உரையாடல், www.opferberatung-ag.ch. ஒரு நிபுணர் உங்களுக்கு தற்போதைய சட்ட நிலைமையை விளக்கி, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஆதரவளிப்பார். ஆலோசனை இலவசம் மற்றும் ரகசியத் தன்மை காக்கப்படும்.. மொழிபெயர்ப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.