பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன. இவை பெரும்பாலும் ரகசியத்தன்மையைக் காக்க கூடியவை, இலவசம், மேலும் தேவைப்பட்டால் மொழிபெயர்ப்பு வழங்கப்படும். உதவி பெறுவது முக்கியம்.

அறிய வேண்டியவை

வன்முறை இல்லா வாழ்விற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உதவியை நாடவும் அல்லது அதைப் பற்றி பேசவும் சிரமப்படுகிறார்கள். உங்கள் நம்பிக்கைக்குறிய நபர், காவல்துறை அல்லது ஆலோசனை மையம் இதற்கு உதவலாம்.

உதவியை எங்கே பெறலாம்?

ஆபத்து அல்லது குறிப்பிட்ட அச்சுறுத்தல் இருந்தால், காவல்துறை உதவும் (117).

ஆர்காவ்-சோலோதுர்ன் பெண்கள் தங்குமிடத்தில் (Frauenhaus Aargau-Solothurn)
குழந்தைகளுடன் அல்லது குழந்தைகள் இல்லாத பெண்கள் பாதுகாப்பு, ஆலோசனை மற்றும் தங்குமிடங்களைப் பெறலாம். தொலைபேசி மூலம் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம் (062 823 86 00).


இங்கே பாதிக்கப்பட்ட அனைவரும் (ஆண்கள் உட்பட) ஆலோசனை பெறலாம்:

ஆர்காவ் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மையம் (Opferberatung Aargau), 062 835 47 90, www.opferberatung-ag.ch

ஆர்காவ் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம் குடும்பத்தில் வன்முறையை அனுபவிப்பவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் அறிவுரை வழங்குகிறது, மேலும் வேண்டிய தகவல்களைத் தெரிவிக்கிறது. இந்த உதவி இலவசம். ஒரு நிபுணருடன் சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடலாம். இந்தப் பணியாளர்கள் ரகசியத்தன்மை காப்பிற்கு உட்பட்டவர்கள். இதன் பொருள் என்னவெனில் இந்த உரையாடல்களைப் பற்றி, காவல்துறையினர் உட்பட யாருக்கும் தெரிவிக்கும் அனுமதி அவர்களுக்கு இல்லை.


குடும்ப வன்முறைக்கு எதிரான தொடர்பு மையம் (Anlaufstelle gegen Häusliche Gewalt), 062 550 20 20, www.ahg-aargau.ch இந்த மையம் காவல்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளை வழங்குகிறது. காவல்துறையின் நடவடிக்கைகளைக் கோராத பாதிக்கப்பட்டவர்கள், அவர் குடும்பத்தினர், அண்டைவீட்டார், மேலதிகாரிகள் போன்றோரும் இந்த மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆலோசனை இலவசம் மற்றும் ரகசியத்தன்மை காக்கப்படும்.


தொலைபேசி 143 – உதவும் கரங்கள் (Die Dargebotene Hand), 143 (24 மணிநேரமும்), ஆங்கிலத்தில் பேச அவசர அழைப்பு எண் 0800 143 000, www.143.ch
அனைவருக்குமான, பிரச்சனை நேரத்திற்கான அவசர அழைப்பு எண். அதைப் பற்றி பேசுவது உதவுகிறது!


ஸ்வ்யூஷேஹால்ட் (ZwüscheHalt), 056 552 08 70 (சூரிச்), www.zwueschehalt.ch
சூரிச், பெர்ன் மற்றும் லூசெர்னில் உள்ள ஸ்வ்யூஷேஹால்ட் குழந்தைகளுடன் அல்லது குழந்தைகள் இல்லாமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தங்குமிடத்தையும் ஆலோசனையையும் வழங்குகிறது. இதில் நிதி பங்களிப்பு தேவைப்படுகிறது.


வன்முறை இல்லாத வாழ்க்கைக்கு குழந்தைகளுக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கான சிறப்பு ஆலோசனை சேவைகள் உள்ளன. அவற்றை இங்கே காணலாம். www.kinderschutz.ch/angebote/beratungs-und-meldestellen