வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கான உதவி

உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ ஒருவரைப் புண்படுத்தும் எவரும், அதற்குப் பொறுப்பேற்று உதவியைப் பெற வேண்டும். ஆலோசனையில் உங்கள் நடத்தையை மாற்ற கற்றுக் கொள்ளலாம்.

அறிய வேண்டியவை

கட்டுப்பாட்டை இழந்து மற்றவரைத் திட்டியோ, அடித்தோ அல்லது அச்சுறுத்தியோ விடுவோம் என்று பயப்படுகிறீர்களா? உங்கள் கோபத்தை என்ன செய்வது என்றே சில நேரங்களில் உங்களுக்குத் தெரியவில்லையா? தைரியத்துடன் உதவியைப் பெறுங்கள்.

சுவிட்சர்லாந்தில் வன்முறை தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் தண்டிக்கப்படுகிறது.

உதவியை எங்கே பெறலாம்?

குடும்ப வன்முறைக்கு எதிரான கல்வித் திட்டம், 062 550 20 20, www.ahg-aargau.ch

இந்தக் கல்வி திட்டத்தில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு வன்முறையின்றி மோதல்களை எவ்வாறு தீர்ப்பது என்று வழிகாட்டப்படும். இந்தக் கல்வி திட்டச் சலுகை குழுக்களாக நடத்தப்படுகிறது, மேலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டது. சில சந்தர்ப்பங்களில், இந்தக் கல்வித் திட்டத்தை தனியாகவும் எடுத்து முடிக்க முடியும். தேவைப்பட்டால் மொழிபெயர்ப்பாளரின் சேவையைக் கோரலாம்.


தொலைபேசி 143 – உதவும் கரங்கள் (Die Dargebotene Hand), 143 (24 மணிநேரமும்), ஆங்கிலத்தில் பேச அவசர அழைப்பு எண் 0800 143 000, www.143.ch உங்களுக்கு யாரிடமாவது உடனடியாகப் பேச வேண்டும் என்றால் நீங்கள் தொலைபேசி எண் 143 உதவும் கரங்கள் (Die Dargebotene Hand)-ஐத் தொடர்பு கொள்ளலாம். இரவு உட்பட எல்லா நேரங்களிலும் உங்களுக்கு ஆலோசனை வழங்க யாரோ ஒருவர் இருப்பார். இந்தச் சலுகை அநாமதேயமானது.