பாலியல் வன்முறை என்றால் என்ன?
பாலியல் வன்முறை என்பது ஒருவர் மீது திணிக்கப்படும் அல்லது கட்டாயப்படுத்தப்படும் பாலியல் தொடர்புடைய செயல்கள். எடுத்துக்காட்டாக: பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்கொடுமை, பாலியல் வற்புறுத்தல், குழந்தை பருவத்தினரிடம் பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தீண்டல்/சுரண்டல் அல்லது கற்பழிப்பு. இணையத்திலும் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக, உங்களுடன் இணைந்து வாழ்வோரின் நெருக்கமான படம் அல்லது புகைப்படப் பதிவுகள் சமூக ஊடகங்களில் அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டால்.
பாலியல் வன்கொடுமை அனைத்து சமூக வகுப்புகளிலும், வயதுக் குழுக்களிலும் நிகழ்கிறது. மேலும் யார் வேண்டுமானாலும் இதைச் சந்திக்க நேரிடலாம். சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்முறை தடைசெய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறது.