கட்டாயத் திருமணம் மற்றும் பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு

சுவிட்சர்லாந்தில் கட்டாயத் திருமணம் மற்றும் பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு நிபுணத்துவ மையங்களுடன் கூடுதலாக பாதிக்கப்பட்டோர் ஆதரவு ஆலோசனை மையங்களும் உதவியை வழங்குகின்றன.

கட்டாயத் திருமணம் என்றால் என்ன?

ஒரு நபர் தனது சொந்த விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தின் வற்புறுத்தலின் கீழ் திருமணம் செய்து கொண்டால், அது கட்டாயத் திருமணம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நபர் தனது விருப்பத்திற்கு மாறாக திருமணவாழ்க்கையில் தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அது கட்டாயத் திருமண வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. வற்புறுத்தலின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: (கொலை) அச்சுறுத்தல், மிரட்டல், உளவியல் அழுத்தம் அல்லது உடல்ரீதியான வன்முறை.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கட்டாயத் திருமணத்தில் தள்ளப்படுகிறார்கள். கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

அறிய வேண்டியவை

சுவிட்சர்லாந்தில் கட்டாய திருமணங்கள் மற்றும் கட்டாய திருமண வாழ்க்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் தண்டிக்கப்படுகின்றன.

கட்டாய திருமணத்தால் பாதிக்கப் பட்டவர்கள் பொதுவாக தீவிர உளவியல் ரீதியான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்கள் உயிர் வாழ்வதற்கு தொழில்முறை உதவி பெரும்பாலும் அவசியம்.

எங்கே உதவியைப் பெறலாம்?

பின்வரும் மையங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிபுணர்களுக்கும் இரகசியமான மற்றும் இலவச ஆலோசனைகளை வழங்குகின்றன:

  • பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம் ஆர்காவ், 062 835 47 90, www.opferberatung-ag.ch
  • கட்டாயத் திருமணத்திற்கான தேசிய நிபுணர் துறை, தொடர்பு கொள்ளவேண்டிய எண் 0800 800 007, www.zwangsheirat.ch

பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு என்றால் என்ன?

பெண் பிறப்புறுப்பு சிதைப்பில் பெண்ணின் பிறப்பு உறுப்பு வெட்டப்படுகிறது. இதில் பல்வேறு வகைகளும் நடைமுறைகளும் உள்ளன. பிறப்புறுப்புச் சிதைப்பு பெற்ற பெண் பிள்ளைகளும், பெண்களும் உடல் ரீதியான மற்றும் உளரீதியான பல்வேறு விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிய வேண்டியவை

பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு சுவிட்சர்லாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் அது தண்டிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்திற்கு வெளியே தங்கள் குழந்தையின் பெண் பிறப்புறுப்புச் சேதத்தை ஏற்பாடு செய்தாலும் பெற்றோர்கள் குற்றத்தைச் செய்வதாகவே கருதப்படுகிறார்கள்.

எங்கே உதவியைப் பெறலாம்?

பின்வரும் மையங்கள் பாதிக்கப்பட்டோருக்கும் நிபுணர்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றன:

  • ஆர்காவ் பாலியல் நல சிறப்புத்துறை, 062 822 55 22, www.seges.ch
    ஆர்காவில் உள்ள இந்த சிறப்புத்துறை பாதிக்கப்பட்டோர்களுக்கும் நிபுணர்களுக்கும் இலவச மற்றும் ரகசிய ஆலோசனைகளை வழங்குகிறது.
  • ஆராவ் மாநில மருத்துவமனையின் பெண்கள் கிளினிக், 062 838 50 63 அல்லது 062 838 50 70, www.ksa.ch ஆலோசனை, மகளிர் மருத்துவ கட்டுப்பாடு, கர்ப்ப காலத்தில் குறுநடுக்கநீக்கம் (டிஃபிபுலேஷன்) போன்றவற்றை வழங்குகிறது. தேவைப்பட்டால், மொழிபெயர்ப்பாளர் சேவை ஏற்பாடு செய்யப்படும்.
  • காரிடாஸ் சுவிட்ஸர்லாந்து, 041 419 23 55, www.caritas.ch
    காரிடாஸ் சுவிட்ஸர்லாந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மற்றும் ரகசிய ஆலோசனைகளை வழங்குகிறது.
  • ஆர்காவ் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையம், 062 835 47 90, www.opferberatung-ag.ch
    ஆர்காவ் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை மையமும் ஆதரவை வழங்க முடியும்.