வெளிநாட்டுச் சாரதிப்பத்திரம்
வெளிநாட்டுச் சாரதிப்பத்திரத்துடன் (Führerausweis) சுவிசுக்குக் குடியேறுபவர்கள் குடியேறி 12 மாதங்களுக்குள் சுவிஸ் சாரதிப்பத்திரத்திற்கு மாற்றலாம். அதற்காக ஒரு விண்ணப்பம் எழுதி மாநில வீதிப்போக்குவரத்து இலாகாவுக்கு (Strassenverkehrsamt) அனுப்பவேண்டும். எந்த நாட்டின் சாரதிப்பத்திரம் என்பதைப் பொறுத்து மாற்றுவதற்குரிய சட்டதிட்டங்களும் வேறுபடும். சோதிப்பதற்காக ஓடிக்காட்ட வேண்டி வரலாம் அல்லது சுவிஸ் கோட்பாடு சோதனை எழுதவும் வரலாம். மேலதிக தகவல்களுக்கு அறோ மாநில வீதிப்போக்குவரத்து இலாகாவை நாடலாம்.