"கணக்குகள் பணம் செலுத்தும் படிவம் மூலம் தபாலகத்தில் அனுப்பப்படும். இதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன.
- மின் வங்கி: இணையமூலம் பணம் செலுத்துவது மிகவும் பரவலானதும் பாதுகாப்பானதும்.
- கருமபீடத்தில்;. பணம் செலுத்தும் படிவம் மூலம் தபாலகத்தில் பணமாகச் செலுத்துதல். தபால் கணக்கு உள்ளவர்கள் நேரடியாகக் கணக்கிலிருந்து கழிக்கலாம். வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்கள் வங்கிக் கரும பீடத்தில் பணம் செலுத்த வேண்டிய அறிவுறுத்தல் கொடுக்கலாம். .
- தபால் மூலம்: பணம் செலுத்த வேண்டிய அறிவுறுத்தல்களை தபால் மூலம் வங்கிக்கோ அல்லது தபாலகத்திற்கோ அனுப்பலாம். மேலதிக விளக்கமான தகவல்களை வங்கி அல்லது தபாலகத்தில் தருவார்கள்.
- தொடர்ந்து ஒழுங்காக வரும் கணக்குகளுக்கு பணம் செலுத்தும் முறைகள்: (LSV) இது வசதியானது செலுத்தவேண்டிய பணம் தானாகவே கணக்கிலிருந்து கழிக்கப்படும். பணம் செலுத்தவேண்டியவர் அதற்குரிய தகவல்களை நேரடியாகவே வங்கி/தபாலகத்திற்கு அனுப்புவார்.
- எப்போதும் ஒரேயளவு தொகை (உூமாக வாடகை) செலுத்த வேண்டுமானால் வங்கி அல்லது தபாலகத்திற்கு ஒரு நிரந்தரக்கட்டளை (Dauerauftrag) மூலம் பணத்தை மாற்ற ஒழுங்கு செய்யலாம்.
செலுத்த வேண்டிய கணக்குகளில் காலக்கெடு குறிக்கப்பட்டிருக்கும். இக் காலக் கெடுவை கடைப்பிடிக்காவிடின் தொடர்ந்து வசூலிப்பு இலாகாமூலம் வசூலிப்பதற்கான நடைமுறை ஏற்படுத்தப்படலாம். "