பெற்றோராயிருத்தல்

ஒரு பிள்ளையை வளர்த்தெடுப்பது முக்கிய கடமையாகும். அதிகமான பெற்றோர் அடிக்கடி கேட்கும் கேள்வி அவர்கள் பிள்ளைகளுக்கு எது நல்லது என்பதே. இது பற்றி மற்றைய பெற்றோருடன் கருத்துப்பரிமாறுவது மிகவும் பிரயோசனமானது. அதைவிட பல விதமான ஆலோசனை நிலையங்களும் உதவிசெய்யும்.

சந்திக்குமிடங்கள்

தாய் தந்தையருக்கு மற்றைய பெற்றோருடன் கருத்துப் பரிமாறுதல் அல்லது விரும்பினால் பிள்ளையுடன் சேர்ந்து செயற்பாடுகளில் பங்குபற்றுதல் போன்ற பரந்த வசதிகள் உள்ளன. சுவிஸ் மற்றும் வெளிநாட்டுப் பெற்றோர் சேர்ந்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக சில விசேட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

  • பால் குடிக்கும் மற்றும் 2 வயது வரையுள்ள சிறு குழந்தைகளுக்குமாகக் கிராமசபைகள் கிறாபல் குறூப் (Krabbelgruppen) இங்கு பெற்றோர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளலாம்.
  • பெற்றோர் - பிள்ளைகள் உடற்பயிற்சி (MuKi-/VaKi-/ElKi-Turnen) இங்கு விளையாட்டு அதனால் மகிழ்ச்சி பெற்றோருக்கும் சிறு குழந்தைகளுக்குமான உடலசைவுகள் என்பன நடக்கும். இந்த உடற்பயிற்சியை அதிகமாக கிராமசபைகளே நடத்தும்.
  • குடும்பமையம் (Familienzentrum) இங்கு பெற்றோர் குழந்தைகளுக்கான பல விதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • நூலகங்கள் சிறிய மற்றும் வளர்ந்த பிள்ளைகளுக்காகவும் பெற்றோருக்காகவும் உரிய வசதிகளை செய்திருக்கின்றன.

வதியும் கிராமசபைகளில் அந்தப் பிரதேசத்திற்குரிய பலவேறு வசதிகளைப்பற்றி அறியலாம். அது எப்போதும் பிரயோசனப்படும்.

பெற்றோர் கல்வி

அறோ மாநிலத்தில் பெற்றோர் பலவிதமான வகுப்புகளுக்குப் போகலாம். வெளிநாட்டவர்களின் விசேடமான தேவைகளுக்காகவும் வகுப்புகள் உண்டு. உதாரணத்திற்கு சுவிஸ் கல்வித்திட்டம் பற்றிய வகுப்பும் உண்டு. ஒரு சில வகுப்புகள் வெளிநாட்டு மொழிகளிலும் நடக்கிறது. இந்த அனைத்து வசதிகள் பற்றியும் இணையத்தளப் பக்கம் "Elternbildung Aargau" பாடசாலைகள் அல்லது கிராமசபைகளில் காணலாம்.

வளர்ப்பு பற்றிய ஆலோசனை

பிள்ளை வளர்ப்புப் பற்றிய ஆலோசனை தேவைப்படுபவர்கள் பல விதமான ஆலோசனை நிலையங்களை நாடலாம். எல்லாப் பிரதேசங்களிலும் குடும்ப ஆலோசனை நிலையங்கள் உள்ளன. தாய் - தந்தை ஆலோசனை (Mütter- und Väterberatung) இது பல கிராமசபைகளிலும் பால் குடிக் குழந்தைகளின் பராமரிப்புக்கு உதவும். பெற்றோர் அவசரத்திற்கு ஆலோசனை பெற தொலைபேசி மூலம் அல்லது ஈ மெயில் (தொ.பேசி 0848 35 45 55 ( சாதாரண கட்டணம் )www.elternnotruf.ch).