சேர்ந்து வாழுதல்

சுவிஸில் பலவிதமான சேர்ந்து வாழும் வாழ்க்கை முறைகள் ஏற்றுக் கொள்ளப்படு கின்றன. மணம்முடிப்பதற்கு 18 வயதை அடைந்திருக்க வேண்டும். வரும் துணையும் சட்டப்படி அதே போல இருக்கவேண்டும்.

ஒன்றாக வாழுதல்

சுவிஸில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஒன்றாக வாழும் முறையை விட தற்போது மிகவும் மாறியுள்ளது. அதிகமான சோடிகள் மணம்முடிக்காமலே (வைப்பாட்டி, Konkubinat) குழந்தைகளைப் பெற்று சேர்ந்து வாழ்கின்றனர். இவர்களுக்கிடையில் கணவன்/மனைவி என்ற இறுக்கமான கட்டுப்பாடுகள் இல்லை. அதே சமயம் ஒரே பாலினத்தவர் சேர்ந்து வாழுதலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஃ பதியப்பட்ட சேர்ந்து வாழுதல்

சுவிஸில் 18 வயதானால் தான் திருமணம் முடிக்கலாம். யார் மணம்முடிக்க விரும்புகிறாரோ அவர் வதியும் கிராமசபைக்குப் பொறுப்பான பிரதேசப் பதிவாளர் அலுவலகத்திற்குச் (Regionales Zivilstandsamt) சென்று அறிவிக்கவேண்டும். அங்கு பதிவாளர் அலுவலகம் திருமண ஆயத்த நடைமுறையைத் தொடக்கி வைக்கும். இதன் போது மணம்முடிக்க விரும்புபவரின் துணையும் திருமண பந்தத்திற்கு ஏற்றவரா எனச்சரி பார்க்கப்படும். இந்த ஆயத்த நடைமுறை நடைபெற்று முடிந்து 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறவேண்டும். அதற்குப் பொறுப்பான பதிவாளர் அலுவலகம் திருமண செயற்பாட்டிற்குத் தேவையான பத்திரங்களின் தகவலைத் தரும். மணம்முடிக்கப் போகும் துணை வெளிநாட்டிலிருந்தால் சுவிஸ் நாட்டிற்குள் வருவதற்குரிய அனுமதியைக் கேட்டு திருமண ஆயத்த நடைமுறையின் போது விண்ணப்பிக்க வேண்டும். ஒரே பாலினத்தவர் மணம்முடிக்கும் போதும் உரிமைகளும் கடமைகளும் வழமையான திருமணம் போன்றே இருக்கும்.

உரிமைகளும் பொறுப்பும்

கணவன் மனைவி இருவருக்கும் சட்டப்படி ஒரேயளவு உரிமையும் பொறுப்பும் உள்ளது .இருவரும் தத்தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மணம்முடிக்க வேண்டும். யாரையாவது வற்புறுத்தி திருமணத்திற்கு உடன்படுத்தியதாக (Zwangsheirat) நிர்வாகப் பணிமனைகள் அறிய நேர்ந்தால் இந்த திருமணபந்தம் செல்லுபடியாகாமல் போவதுடன் வற்புறுத்தியவரைச் சட்டம் தண்டித்துத் தீர்ப்பளிக்கும்.எவர் ஒருவர் தம்மை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக உணருகிறாரோ உடனடியாக உதவி கோர வேண்டும்.அறோ மாநிலத்தில் விசேட தொ.பேசி (062 835 47 90) இல் அழைக்கவும்.

குடும்பத்தைத் திட்டமிடல்

குடும்பத்திட்டமிடல் கர்ப்பம் பாலியல் சம்பந்தமான கேள்விகள் இருப்பின் அறோ மாநிலத்தின் யுயசயரஇ டீசரபப ஆலோசனை நிலையங்களை அணுகலாம். இந்த சேவைகள் இலவசம். நம்பிக்கையானவை. இங்கு கருத்தடை முறைகள், பாலியல் நோய்கள், விருப்பமின்றிய கர்ப்பம் அல்லது பாலியல் நோய்கள் பற்றிப் பேசலாம். இங்கு பிள்ளைகளுள்ள பெற்றோரும் பெற்றோராகப்போகப்போபவர்களும் போகலாம்.

விவாகரத்து

விவாகரத்து கணவன் மனைவி இருவருமாக இணைந்து அல்லது ஒருவர் மூலம் மட்டும் கோரப்படலாம். பிரதேச குடும்ப நீதிமன்றமே (Familiengericht) இதற்குப் பொறுப்பாகும். வெளிநாட்டில் மணம் முடித்தவர்களும் சுவிஸ் சட்டப்படி இங்கு விவாகரத்துப் பெறலாம். இதற்கு சுவிசில் ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைத்தராதரத்தில் குறைந்தது 1வருடமாவது வாழ்ந்திருக்க வேண்டும். விவாகரத்து, குடியிருப்பு நிலை அல்லது அப்போது நடைமுறையிலிருக்கும் பிராஜாவுரிமைகோரல் நடைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விவாகரத்து பெற்ற வெளிநாட்டவர் சுவிசில் தொடர்ந்தும் வாழ்வதற்கு பலவிதமான நிபந்தனைக்கு உட்படவேண்டும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு விதிகள் பொருந்தும். விவாகரத்து பற்றிய தகவல்களை வாழ்க்கைத்துணை- மற்றும் குடும்ப ஆலோசனை நிலையம் அல்லது ஒரு சட்ட ஆலோசனை நிலையத்தில் பெறலாம்.