கல்வித்திட்டம்

சுவிஸ் கல்வித்திட்டம் உறுதியான ஆளமை வளர்ச்சிக்குரிய வாய்ப்பைக் காட்டி நிற்கிறது. உயர்ந்த பெறுமதியான தொழிலைத் தொழில்கல்வி தரும். ஆரம்பத்தில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்று பின்பு உயர்கல்வி அல்லது பட்டப்படிப்புப் படிக்கலாம்.

உருவாக்குதல் / பொறுப்பு

சுவிஸில் மூன்று ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான கல்வித் திட்டங்கள் உள்ளன:

  • கட்டாயப்பாடசாலை (Volksschule: Kindergarten, Primarschule und Sekundarstufe I)
  • தொழில் அடிப்படைக்கல்வி அல்லது தொழில்சார்கல்வி (Sekundarstufe II)
  • உயர்கல்விப் பாடசாலை/பல்கலைக்கழகமும் உயர்தொழில்கல்வி (Tertiärstufe)

மேலுள்ள 3 நிலைகளுக்கும் அரசே பொறுப்பாகும். அதன் செயற்பாடுகளும் பொறுப்புகளும் அரசு மாநிலம் கிராமசபையால் பகிரப்படும்.ஆகையினால் பாடசாலையும் கல்வித்திட்டமும் மாநிலங்களுக்கிடையில் வித்தியாசப்படும்.

பாடசாலையின் பொறுப்புகள்

அறோ மாநிலத்தில் கட்டாயப்பாடசாலை 11 வருடங்கள் ஆகும். இங்கு பிள்ளைகள் 4 வயதிலேயே படிப்பைத் தொடங்குகிறார்கள். காரணம் காட்டி அனுமதி பெறாமல் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாவிடின் பெற்றோர் அபராதப்பணம் மூலம் தண்டிக்கப்படுவர். 16 வயதிற்குட்பட்ட இளையவர்கள் புதிதாகக் குடிபெயர்ந்து வந்திருந்தால் அவர்கள் கட்டாயப்பாடசாலைக்குப் போக உரிமையுண்டு.இளையவர்கள் அதன் பின்பு புதிதாகக் குடிபெயர்ந்து வந்தால் கல்வியும் தொழிலுக்குமான ஆர்கவ் ஆலோசனை நிலையத்தில் (ask!) வேறு வசதி வாய்ப்புகள் பற்றியும் அறியலாம்.

கட்டாயப்பாடசாலையின் பின்பான பயிற்சி

கட்டாயப்பாடசாலையின் பின்பு அதிகமான இளையவர்கள் தொடர்நது கல்வியைக் கற்பார்கள்.விசேடமாக அதிகமானவர்கள் தொழில் அடிப்படைப்பயிற்சியைத் (தொழில்பயிலுதல், Berufslehre) தொடங்குவார்கள். இதுவே பின்பு உயர்தொழில் கல்வி கற்பதற்கு நுழைவாயில் ஆகலாம். தொழில் அடிப்படைக்கல்வியின் போதோ அல்லது பின்போ தொழில் புலமைக்குக் (Berufsmaturität) கற்றிருந்தால் பின்பு உயர்துறைக் கல்லூரிக்கு (Fachhochschule) போகலாம். 20 வீதமான இளையவர்கள் யிம்நாசியப்புலமை (gymnasiale Maturität) கற்று நேரடியாகவே பல்கலைக்கழக உயர்கல்விக்குப் போகிறார்கள்.

உதவிநிதி

பணவசதி குறைந்தவர்கள் உதவிப்பணம் (Stipendien) மூலம் பாடசாலையிலோ அல்லது தொழில்கல்வியோ கற்கலாம். இது கட்டாயப்பாடசாலையின் பின்பு தொடர்ந்து கற்பதற்குரிய உதவிப்பணமாக வழங்கப்படும். அறோ மாநிலத்தில் வாழும் வெளிநாட்டவர்களும் கூட வசதி குறைந்திருந்தால் இந்த உதவியால் பயனடையலாம். ஆயினும் கூட மாணவர்களின் அல்லது அவர்கள் பெற்றோர்களின் தேசியஇனம். வதிவிட உரிமை நிலையைப் பொறுத்தும் இந்த உதவிப்பணம் பெறுவது தஙகியுள்ளது. மேலதிக தகவல்களுக்கு மாநில உதவிநிதிப்பகுதியை (Sektion Stipendien) நாடலாம்.