பல்கலைக்கழகம் / உயர் கல்வி நிலையங்கள்

சுவிசில் 2 தெரிந்த உயர்கல்விச்சாலைகள் உள்ளன. பல்கலைக்கழகம் மற்றும் தொழில்துறைக்கல்லூரி. வெளிநாட்டு மற்றூறிற் பத்திரங்களுடன் இப்பாடசாலைகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.

உயர்கல்வி நடைமுறை

சுவிசின் உயர் கல்வி நிலையங்களில் பல்கலைக்கழகத்தையும் உயர் தொழிற்துறைக்கல்லூரியையுமFachhochschulen) (Tertiärstufe) வித்தியாசப்படுத்தமுடியும். தொழிற்துறைக்கல்லூரிகள் கூடுதலாக செயன்முறையையும் பல்கலைக்கழகங்கள் கூடுதலாக கோட்பாடுகளையும் கொண்டுள்ளன. இவ்விரு பாடசாலைநடைமுறைகளும் ஒருதரமட்டமாக்கப்பட்ட ஐரோப்பிய பொலோனா-நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஐரோப்பாவால் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண அல்லது சிறப்பு தரத்தில் சித்தியடையலாம்.

அனுமதித்தல்

ஒவ்வொரு உயர்கல்விக்கூடங்களும் வேறுவேறான அனுமதி நிபந்தனையை கொண்டிருக்கும். சுவிஸ் மற்றூறிற் பத்திரங்களுக்கு உயர்கல்வி அனுமதி நிச்சயமானது. வெளிநாட்டு மற்றூறிற் பத்திரங்கள் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. கற்கவிரும்பும் பாடநெறிக்கு அவை உள்ள உயர்கல்விக்கூடத்திற்கு (பல்கலைக்கழகம்/தொழிற்துறைக்கல்லூரி) விண்ணப்பிக்கலாம். பொதுவாக மிகத்திறமையான டொச்மொழி தேவைப்படுகிறது. சில விதிவிலக்காக முற்றாக ஆங்கிலத்தில் நடைபெறும் துறைகளும் உள்ளன. அறோ பயிற்சி மற்றும் தொழில் ஆலோசனைப்பிரிவு (ask!) வேறுவேறான நிலைகளில் உள்ள சந்தர்ப்பங்கள் பற்றி எப்போதும் தகவல் வழங்குகிறது.

அதி உயர் தொழிற்கல்வி

சுவிசில் உயர்கல்விச்சாலைகளைத்தவிர அதிஉயர் தொழிற்கல்வியும் மேற்படிப்பு höhere Berufsbildung) கற்பதற்கு விரும்பத்தக்க வழியாக இருக்கிறது. இது தொழிற்சிறப்புநபரை ஒரு விசேடநிலைக்கு மற்றும் ஆளமான சிறப்;பான அறிவு மற்றும் கொண்டு செலுத்தும் தகமையையும் உருவாக்குகிறது. உயர் தொழற்பயிற்சியானது முடிவில் தொழிலிற்கான அடிப்படைப்பயிற்சியைத் தருகிறது. (தொழிற்பயிற்சி, Berufslehre). இதற்கு மற்றூறிற் முக்கியமில்லை. அறோ பயிற்சி மற்றும் தொழில் ஆலோசனைப்பிரிவு (ask!) வேறுவேறான நிலைகளில் உள்ள சந்தர்ப்பங்கள் பற்றி எப்போதும் தகவல் வழங்குகிறது.