வயோதிப- மற்றும் பின்தங்கியோர் காப்புறுதி (1 வது ஏற்பாடு,1.Säule)
வயோதிப- மறறும் பின்தங்கியோர் காப்புறுதி (AHV) ஓர் அரச நிறுவனம். பெரும்பாலான வயது வந்தோர் இதற்கு கட்டணம் செலுத்தவேண்டும். இக்கட்டணமானது தொழில் புரிவோரின் சம்பளத்தில் நேரடியாகக்கழிக்கப்படும், அத்துடன் வேலைகொடுப்போர் அரைப்பகுதியை பொறுப்பேற்பர். சொந்தத்தொழில் புரிவோரும் தொழில் புரியாதோரும் தமது கிராமிய சமூகவேவைகள் காப்புறுதி நிலையத்தில் (Gemeindezweigstelle der Sozialversicherungsanstalt, SVA) எப்படி தமது கட்டணத்தை செலுத்துவது பற்றி தெரிவிக்க வேண்டும். AHV ஓய்வுதியம் எடுப்பவர்களுக்கு மாதாந்தம் ஓய்வூதியத்தை வழங்குகிறது. செலுத்தப்படும் ஓய்வூதியத்தொகையானது அவர்கள் முன்பு செலுத்திய தொகையைப் பொறுத்துள்ளது. அத்துடன் AHV ஒருவர் இறந்தால் அவரின் மனைவிக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் உதவி புரிகிறது. (விதவை- மற்றும் பிள்ளைகள் ஓய்வூதியம்). ஒவ்வொருவரும் தமது சொந்த காப்புறுதி இலக்கத்தை கொண்ட AHV அட்டையை பெற்றுக்கொள்வர்